ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணைய அறிவிப்பு கண்துடைப்பு நாடகம் ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம் குறித்த முதலமைச்சரின் விசாரணை ஆணைய அறிவிப்பு கண்துடைப்பு நாடகம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2017-08-17 15:10 GMT
சென்னை,

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா மரணம் குறித்த முதலமைச்சரின் விசாரணை ஆணைய அறிவிப்பு கண்துடைப்பு நாடகம்.  ஜெயலலிதா மரணம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் விடைகாண சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து உண்மையான விசாரணை நடைபெற முதலமைச்சரும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் தடயங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் அமைதி காத்தனர். ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியபோது மவுனம் காத்தவர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்