ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க கமிஷன்: அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வரவேற்பு

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Update: 2017-08-17 14:35 GMT
சென்னை,

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முதல் அமைச்சர் பழனிச்சாமியின் அறிவிப்புக்கு, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை வரவேற்பு தெரிவித்துள்ளது. 

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “  ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது. முதல் அமைச்சரின் அறிவிப்பு நல்ல நடவடிக்கை. ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தது விசாரணை ஆணையம் மூலம் தெரியவரும். 

 விசாரணை ஆணையம் மூலம் தேவையற்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சிறப்பான சிகிச்சை அளித்தும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாதது மிகுந்த வருத்தத்தை அளித்தது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்