தினகரனை ஆதரிக்கும் 40 எம்.எல்.ஏக்கள் கலக்கத்தில் எடப்பாடி பழனிசாமி அணி

டிடிவி தினகரனை 40 எம்.எல்.ஏக்கள் ஆதரிப்பதால் எடப்பாடி பழனிசாமி அணியினர் கலக்கத்தில் உள்ளனர்.

Update: 2017-08-15 07:57 GMT
மதுரை

அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் இரு பிரிவாக செயல்பட்டு வந்தது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி  அணியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தனியாக செயல்படத் தொடங்கினார்கள். என்றாலும்  எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தினார். அ.தி.மு.க.வில் உள் கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள  நிலையில் தினகரன் தன் பலத்தை எடுத்துக்காட்டவே இந்த கூட்டத்தை கூட்டினார்.

மேலூர் கூட்டத்தில் 20 எம்.எல்.ஏ.க்களும், 7 எம்.பி.க்களும் பங்கேற்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-

எம்.பி.க்கள்

1. செந்தில்நாதன், சிவகங்கை.
2. நாகராஜன், கோவை.
3. ராதாகிருஷ்ணன், விருதுநகர்.
4. வசந்தி முருகேசன், தென்காசி.

மேல்சபை எம்.பி.க்கள்

1. நவநீதகிருஷ்ணன்,
2. விஜிலா சத்யானந்த், தூத்துக்குடி.
3. கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி

எம்.எல்.ஏ.க்கள்

1. தங்கதமிழ்செல்வன், ஆண்டிப்பட்டி.
2. செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி.
3. பழனியப்பன், பாப்பிரெட்டிபட்டி.
4. தோப்பு வெங்கடாசலம், பெருந்துறை.
5. ரங்கசாமி, தஞ்சை.
6. உமாமகேஸ்வரி, விளாத்திக்குளம்.
7. சுப்பிரமணியன், சாத்தூர்.
8. மாரியப்பன் கென்னடி, மானாமதுரை.
9. தங்கத்துரை, நிலக்கோட்டை.
10. ஜக்கையன், கம்பம்.
11. கதிர்காமு, பெரியகுளம்.
12. வெற்றிவேல், பெரம்பூர்.
13. முத்தையா, பரமக்குடி.
14. சந்திரபிரபா, ஸ்ரீவில்லிபுத்தூர்.
15. முருகன், ஆரூர்.
16. சுந்தரராஜன், ஓட்டப்பிடாரம்.
17. ஜெயந்தி பத்மநாபன், குடியாத்தம்.
18. பார்த்திபன், சோளிங்கர்.
19. எழுமலை, பூந்தமல்லி.
20. பாலசுப்பிரமணியன், ஆம்பூர்

கூட்டத்தில் கலந்து கொண்ட மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் யார் என்பது தெரியவில்லை. இருப்பினும் போலீசார் 22 பேர் பங்கேற்றதை உறுதி செய்தனர்.மேலும் 12 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவான நிலையில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் இவர்கள் எடப்பாடி பழனி சாமி அணி மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே 12 எம்.எல்.ஏ.க்களும்
தினகரனை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் தினகரனுக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பது உறுதியாகியுள்ளது.

அ.தி. மு.க. கூட்டணி கட்சி எம்.எல். ஏ.க்களான  தமிமுன் அன்சாரி, (மனித நேய ஜனநாயக கட்சி), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை) ஆகியோரும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலூர் கூட்டத்தில் பங்கேற்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. -வும், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான வெற்றிவேல் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முதல் பொதுக்கூட்டம் மிக எழுச்சியுடன் நடந்து முடிந்தது. மறைந்த முதல்வர் அம்மா நடத்திய பொதுக்கூட்டம் போல் இது அமைந்து இருந்தது.

உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் ஒவ்வொரு கேள்விக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வமும் பதில் சொல்ல வேண்டும்.

முதல் கூட்டத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள், 7 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இன்னும் பலர் எதிர் முகாமில் இருக்கிறார்கள். தற்போது 40 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர்.

இவர்கள் தவிர மேலும் பலர் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் சரியான நேரத்தில் வெளிப் படையாக வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்