தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளார்கள் என நிரூபணமாகி உள்ளது -டிடிவி தினகரன்

தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளார்கள் என நேற்றைய கூட்டத்தின் மூலம் நிரூபணமாகி உள்ளது என டிடிவி தினகரன் கூறினார்.

Update: 2017-08-15 06:09 GMT
மதுரை

அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் இரு பிரிவாக செயல்பட்டு வந்தது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி  அணியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தனியாக செயல்படத் தொடங்கினார்கள். என்றாலும்  எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தினார். அ.தி.மு.க.வில் உள் கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள  நிலையில் தினகரன் தன் பலத்தை எடுத்துக்காட்டவே இந்த கூட்டத்தை கூட்டினார்.

இன்று டிடிவி தினகரன் குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:-

1.5 கோடி தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளார்கள் என்பது நேற்றிய கூட்டத்தின் மூலம் உறுதியாகி உள்ளது. அமைச்சர்களும், மற்றவர்களும் திருந்தி வரவேண்டும், இல்லையென்றால் திருத்தப்படுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றி அடையும் வரை எங்களுக்கு ஓய்வில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. என அவர் கூறினார்

மேலும் செய்திகள்