மருத்துவ மாணவிகள் 3 பேருக்கு நிதி உதவி அ.தி.மு.க.(அம்மா) அணி சார்பில் வழங்கப்பட்டது

அ.தி.மு.க.(அம்மா) அணி தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

Update: 2017-08-14 16:45 GMT

சென்னை,

மருத்துவம் பயிலும் மாணவிகளான திருவண்ணாமலை மாவட்டம், கண்ணக்குறுக்கை கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் மகள் ஆர்.பிரியதர்ஷினி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரத்தை சேர்ந்த கருப்புசாமி மகள் கே.மோகனா, புதுக்கோட்டை மாவட்டம் எல்.என்.புரத்தை சேர்ந்த வல்லத்தரசு மகள் வி.மேகலா ஆகிய 3 பேரின் 2017–2018–ம் ஆண்டிற்கான கல்வி கட்டணத்திற்கான நிதியுதவியாக, கட்சி கணக்கில் இருந்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 400 ரூபாய்க்கான வரைவோலைகள் அ.தி.மு.க.(அம்மா) அணி சார்பில் வழங்கப்பட்டது.

நிதியுதவியை பெற்றுக்கொண்ட மாணவியரும், அவர்களது குடும்பத்தினரும் தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியை கட்சிக்கு தெரிவித்து கொண்டனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்