நாட்டை வளமிக்கதாக உருவாக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து
சாதி, மத வேறுபாடு களைந்து நாட்டை வளமிக்கதாக உருவாக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என முதல் -அமைச்சர் சுதந்திர தின வாழ்த்து
சென்னை,
முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஆங்கிலேயர்களிடம் இருந்து, நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த பொன்னான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாருக்குள்ளே நல்ல நாடாகிய நம் பாரத நாடு, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த போது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்கள் புரிந்து, தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தேசத்திற்காக தியாகம் செய்து, இந்திய தேசத்திற்கு விடுதலை பெற்றுத் தந்த விடுதலை போராட்ட வீரர் களையும், வீராங் கனை களையும் நினைவு கூரும் நன்னாள் இந்தச் சுதந்திரத் திருநாளாகும்.
இந்திய நாட்டின் தனிச் சிறப்பான வேற்றுமையில் ஒற்றுமை காணும் உணர் வினை காத்து, சாதி, மத வேறுபாடுகளை களைந்து, நமது நாட்டை வளமையும் வலிமையும் மிக்கதாக உருவாக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.