ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்த தமிழக அரசின் உத்தரவு செல்லுமா?
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு செல்லுமா? என்ற மனுவின் மீது 14–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.
புதுடெல்லி,
இதைத் தொடர்ந்து, 3 பேர் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்வதற்கு இடைக்கால தடைவிதித்தது.
இந்தவழக்கில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிப்பது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு செல்லுமா? என்பது குறித்த கேள்வியை விசாரிக்க நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், பிரபுல்ல சி.பந்த், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.இந்நிலையில் நேற்று ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் சார்பில் வக்கீல் ராமசுப்பிரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரஞ்ஜன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி, பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை குற்றவாளிகள் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவிட்டனர். அவர்கள் தொடர்பான இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதால் அதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரஞ்ஜன் கோகாய் இந்த வழக்கு வருகிற 14–ந் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டார்.