அ.தி.மு.க பொதுசெயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை - தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க பொதுசெயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

Update: 2017-08-10 12:45 GMT
சென்னை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு  அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்தார். தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க இருந்த நிலையில், பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து வெளியேறி, தன்னை மிரட்டியே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக பகிரங்கமாக பேட்டியளித்தார்.

இதனால், அதிமுக இரண்டாக உடைந்தது. இரு அணிகளும் அதிமுகவின் கட்சியும் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்று மனு கொடுத்தனர். இதனால், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அதிமுக பெயரும், கட்சி சின்னமும் முடக்கப்பட்டது

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அஸ்பயர் சுவாமிநாதன்   என்பவர் எழுப்பிய கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

அதில், அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை. அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை தொடர்ந்து நிலுவையில் இருப்பதால், அதிமுக பொதுச்செயலாளர் பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து இருந்தது.

இந்த் நிலையில் மீண்டும் இதே போன்ற ஒரு கேள்விக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம்  அ.தி.மு.க பொதுசெயலாளராக சசிகலா நியமனம் செய்யபட்டதை இன்னும் அங்கீகரிக்க வில்லை  என கூறி உள்ளது.

மேலும் செய்திகள்