எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தற்போதுதான் விழித்துள்ளது ஓ.பி.எஸ் அணி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தற்போதுதான் விழித்துள்ளது என ஓ.பி.எஸ் அணி கூறி உள்ளது.;

Update: 2017-08-10 09:14 GMT
சென்னை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. அம்மா அணி அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டினார். கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்  டி.டி.வி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. டி.டி.வி தினகரனால் கட்சியின் எந்த பதவியையும் வகிக்க முடியாது என தீர்மானம் நிரைவேர்றி உள்ளனர்.

இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தற்போதுதான் விழித்துள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணை, சசிகலா, டிடிவியை கட்சியிலிருந்து நீக்கினால் பேச்சு என கூறியிருந்தோம். எங்களின் பிரதான 2 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தினகரன் மட்டுமல்லாமல், சசிகலாவையும் நீக்க வேண்டும். 10 ஆண்டுக்கு முன்பே டிடிவி தினகரன் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்பது யூகமே இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்