64 மீனவர்களையும், 125 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 64 மீனவர்களையும், 125 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரே நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 41 மீனவர்கள், ராமேசுவரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் என்று மொத்தம் 49 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையின் அராஜக நடவடிக்கைக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அராஜகமாக கைது செய்தது மட்டுமின்றி தமிழக மீனவர்களின் இரு படகுகளை தங்களின் கப்பலை விட்டு மோதி கடலில் மூழ்கடித்திருப்பதும், மற்ற படகுகளை பறிமுதல் செய்திருப்பதும் இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான செயலாக அமைந்திருக்கிறது.
ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி ராமேசுவரத்தில் தொடங்கி வைத்த ஈரம் காய்வதற்குள் இலங்கை கடற்படை இப்படியொரு மாபாதகத் தாக்குதலை நம் நாட்டு மீனவர்கள் மீது நடத்தி, 49 மீனவர்களைக் கைது செய்திருப்பது மிக மிக மோசமான, மனித உரிமைகளை மீறிய, அந்த மீனவக் குடும்பங்களை நிலைகுலைய வைக்கும் இதயமற்ற நடவடிக்கையாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய அரசு துவங்கியுள்ள ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்திற்கும் ஊறு விளைவிக்கும் செயலாகவே இலங்கை கடற்படையின் இந்த கண்மூடித்தனமான கைதுகள் அமைந்துள்ளன.
கண்மூடித்தனமாக நடந்துள்ள இந்த மீனவர் கைது நடவடிக்கை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீனவர்களை கொந்தளிக்க வைத்து, அவர்கள் தீவிரப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். ஆகவே, 7.8.2017 அன்று கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மற்றும் ராமேசுவரத்தைச் சேர்ந்த 49 மீனவர்களையும் சேர்த்து இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் 64 மீனவர்களையும், 125 படகுகளையும் உடனடியாக விடுவிக்க, மத்திய அரசு தூதரக ரீதியிலாக உரிய அழுத்தத்தை, இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும்.
மீனவர்களின் படகுகளை முட்டி மோதி நாசப்படுத்துவது, பறிமுதல் செய்து இலங்கை சிறையில் வைப்பது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு கைவிட வேண்டும் என்று இந்திய அரசு, அந்நாட்டு பிரதமரிடமோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரிடமோ கண்டிப்புடன் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.