கட்சியும், ஆட்சியும் எங்களிடம் தான் உள்ளது விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி பேச்சு
கட்சியும், ஆட்சியும் எங்களிடம்தான் உள்ளது, மக்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
விழுப்புரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:
டெங்கு காய்ச்சலை சமாளிக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கட்சியும், ஆட்சியும் எங்களிடம்தான் உள்ளது, மக்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். பொதுச்செயலாளர் பதவி குறித்த விசாரணை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளதால் கருத்து தெரிவிக்க முடியாது.
பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பது ஜனநாயக உரிமை. தமிழக அரசின் முதன்மையான சவாலே குடிநீர் பிரச்சினை தான், இதனை சமாளிக்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தொண்டர்கள் ஒரேஅணியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்.
விழுப்புரத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும். விழுப்புரத்தில் ரூ.198 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.