எடப்பாடி பழனிசாமி நாளை அ.தி.மு.க தலைமைக்கழகம் வருகிறார்

எடப்பாடி பழனிசாமி நாளை அ.தி.மு.க தலைமைக்கழகம் வருகிறார் அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்

Update: 2017-08-09 08:22 GMT
சென்னை,

அ.தி.மு.க.  அம்மா அணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில்  60 புதிய நிர்வாகிகளுக்கு தினகரன் பதவி வழங்கினார். அவர்கள் டி.டி.வி. தினகரனை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

விரைவில் டி.டி.வி. தினகரன் தலைமைக் கழகம் வருவார் என்றும், அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் தலைமை கழகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள  தலைமைக் கழகத்துக்கு நாளை காலை 10 மணிக்கு செல்கிறார். அங்கு கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். கட்சியில் நிலவும் குழப்பங்கள் மற்றும் தினகரன் அணியினரை சமாளிப்பது குறித்தும் இதில் விவாதிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்