கொலை மிரட்டல் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை - சகாயம் ஐஏஎஸ் பேட்டி

தனக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார்.

Update: 2017-08-08 14:18 GMT
சென்னை,

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிரானைட் முறைகேடு விசாரணையின்போது, தனக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேவற்கொடியோனுக்கு பாதுகாப்பு வழங்கவும், விபத்தில் மரணமடைந்த மற்றொரு நபர் குறித்து விசாரிக்கவும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரானைட் முறைகேடு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவே ஆகஸ்ட் இறுதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்