அ.தி.மு.க. (அம்மா) அணியில் தி.மு.க.வினர் இணைந்தனர்
அ.தி.மு.க. (அம்மா) தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
சென்னை,
அ.தி.மு.க. (அம்மா) தலைமை நிலைய செயலாளரும், முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது இல்லத்தில், சேலம் ஆத்தூர் 10–வது வார்டு தி.மு.க. செயலாளர் ஜி.ராஜேஷ் தலைமையில் 250–க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் (அம்மா) இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன், எம்.எல்.ஏ. சின்னதம்பி ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.