அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும் எடப்பாடி பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும். விரைவில் ஒன்றுபட்ட அ.தி. மு.க.வை பார்க்கலாம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Update: 2017-08-07 06:29 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று தி.மு.க.வைச் சேர்ந்த 250 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் நிருபர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு முயற்சி செய்து வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் இது பற்றி பேசி வருகிறார். நீட் தேர்வு பிரச்சினையில் தமிழக மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும். விரைவில் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை பார்க்கலாம்.  சட்டசபையில் முக்கிய பிரச்சினைகளை பேச வில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி இருக்கிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளித்துள்ளோம்,  அவர் சபைக்கு வந்து இருந்தால் இப்படி கூறி இருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்