ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் மேலும் 5 பேர் தொடர்பா?
ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் கோவையில் மேலும் 5 வாலிபர்களிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்.
கோவை,
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆதரவு அளித்து ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபடுகிறார்கள் என்று தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு(என்.ஐ.ஏ.) தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கோவை உக்கடம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தி சில வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்களை விடுவித்தனர்.
கடந்த 3-ந் தேதியும் கோவை வந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் கரும்புக்கடை, ஆசாத் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 வாலிபர்களிடம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தினார்கள்.
மேலும், அந்த பகுதிகளில் உள்ள 2 வீடுகள் மற்றும் ஒரு கடையில் சோதனை நடத்தி மடிக்கணினி, டி.வி.டி.க்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பின்பு அதிகாரிகள் சம்மன் வழங்கியதால், அந்த வாலிபர்கள் நேற்றுமுன்தினம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜரானார்கள். அதன்பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று காலை மீண்டும் கோவை வந்து 5 பேரை பிடித்து விசாரித்தனர்.
கோவை காட்டூர், உக்கடம், ஆர்.எஸ்.புரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வைத்து அந்த 5 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். இவர்கள் அனைவரும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள வாலிபர்கள். அவர்களில் 2 பேர் கோவையில் பழைய புத்தக கடை வைத்திருப்பதாகவும், 2 பேர் காந்திபுரத்தில் உள்ள செருப்பு கடையில் வேலைபார்ப்பதாகவும், ஒருவர் பழைய டயர் குடோன் வைத்திருப்பவர் என்றும் தெரியவந்தது.
அவர்களில் 2 பேரை கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) வந்து ஆஜராகுமாறு சம்மன் வழங்கினார்கள். மற்ற 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதுவரை யாரையும் கைது செய்யாததால் அவர்களின் பெயர்களை வெளியிட தேசிய புலனாய்வு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதேபோல் நேற்று முன்தினம் திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பனியன் நிறுவன தொழிலாளியிடமும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவருடன் அவர் தொடர்பில் இருந்ததாக கூறி விசாரணை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவை போலீசார் கூறியதாவது:-
‘5 பேருக்கும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? அவர்கள் சமூக வலைதளங்களில் என்ன தகவல்களை பரிமாறிக்கொண்டனர்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.