சென்னையில் உள்ள காமராஜர் நினைவு இல்லம் சீரமைக்கப்படுமா?
சென்னையில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தின் சுவர் ‘பெயிண்ட்’ உரிந்து காணப்படுகிறது.
சென்னை,
‘பெருந்தலைவர்’, ‘கல்வி கண் திறந்தவர்’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் காமராஜர். இவர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் தமிழகம் பல்வேறு முன்னேற்றங்களை கண்டது.
அவருடைய ஆட்சி காலத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்தது. அதேபோல், 9 முக்கிய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினார். புதிய தொழிற்சாலைகளையும் தமிழகத்துக்கு கொண்டு வந்தார்.
நேர்மையின் சிகரமாக திகழ்ந்த காமராஜர் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார்.
அவர் முதல்-அமைச்சராக இருந்த போது சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலைப்பிள்ளை தெருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டை அவருக்கு எப்படியாவது வாங்கி கொடுத்து விட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் முயற்சித்த போதும், காமராஜர் அதை விரும்பவில்லை.
இறுதியாக, அவர் இறந்த பிறகு தமிழக அரசு அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றியது. அந்த வீட்டில் அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் காட்சி பொருளாக மாற்றினார்கள். மேலும் அவருடைய இளம் வயது தொடங்கி அரசியல் பிரவேசம், முக்கிய தலைவர்களுடான சந்திப்பு உள்பட பல்வேறு புகைப்படங்கள் அந்த வீட்டில் இன்றளவும் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு சார்பில் அந்த வீடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு பொறுப்பாளர், துப்புரவு பணியாளர், பாதுகாவலர் என 3 பேர் அங்கேயே பணிபுரிகின்றனர். இந்த நிலையில், காமராஜரின் நினைவு இல்லத்தின் சுவரில் ஆங்காங்கே ‘பெயிண்ட்’ உரிந்து காணப்படுகிறது. மேலும், அவருடைய காட்சி பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் அதற்கான விளக்கங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. வெறும் தாளில் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு அதை எழுதி வைத்து இருக்கின்றனர்.
அதேபோல், இல்லத்தின் முதல் மாடியில் ஹால் மற்றும் காமராஜர் ஓய்வு எடுத்த அறையில் வைக்கப்பட்டுள்ள ‘ஷோபா’க்களில் அழுக்கு படிந்து கிடக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது என்று பார்வையிட வந்த பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், அவர்கள் இதுதொடர்பாக உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.