பால் நிறுவனங்களுக்கு எதிராக தடையை மீறி பேட்டி அளித்திருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு எச்சரிக்கை
தடை மீறி, ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடாது என்ற தடை மீறி, ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய தனியார் பால் நிறுவனத்தினர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளதாகவும், தரம்குறைந்ததாக உள்ளதாகவும், பத்திரிகையாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி கொடுக்கிறார். இதற்கு தடைவிதிக்கவேண்டும். எங்கள் நிறுவனங்களின் பால் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததற்காக, தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதி சி.பி.கார்த்திகேயன், ‘ஆதாரம் இல்லாமல் தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக அமைச்சர் குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது’ என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ‘மனுதாரர்கள் நிறுவனத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்க அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு இந்த ஐகோர்ட்டு தடைவிதித்துள்ளது. அந்த தடையை மீறும் விதமாக, அமைச்சர் தன்னுடைய வக்கீல் மூலம் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வைத்து, மனுதாரர்கள் நிறுவனத்துக்கு எதிரான அவதூறு கருத்தைகளை தெரிவிக்கிறார்’ என்று கூறினார்.
இதற்கு அமைச்சர் தரப்பில் ஆஜரான வக்கீல் ராகவாச்சாரி எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘ஊடகங்களுக்கு வக்கீல் அளித்த பேட்டி குறித்து ஆதார ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள். அதில், தடையை மீறியதாக தெரிந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உத்தரவிட்டார். விசாரணையை இன்று (புதன்கிழமை) பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.