தொண்டர்கள் இருக்கும் இடம் தான் எங்களுக்கு கழகம்: கே.பாண்டியராஜன் பேட்டி
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கைப்பற்ற வேண்டிய தேவை இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை,
தொண்டர்கள் இருக்கும் இடம் தான் எங்களுக்கு கழகம் என்றும், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கைப்பற்ற வேண்டிய தேவை இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
அ.தி.மு.க. தற்போது 3 அணிகளாக பிரிந்து உள்ளது. டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு அணியும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் என தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர், எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைய காலக்கெடு விதித்தார். அவர் அறிவித்த காலக்கெடு முடிய இன்னும் 3 நாட்களே உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்று ஆலோசனை நடந்தது. இதில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.பாண்டியராஜன், மூத்த நிர்வாகி மதுசூதனன் உள்பட பலர் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் பிற்பகல் 3.30 மணி வரை நடந்தது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– இரு அணிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?
பதில்:– அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் உயர்மட்டக்குழு கூடி கட்சி வளர்ச்சி குறித்தும், தர்ம யுத்தம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இணைப்பு சார்ந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
கேள்வி:– எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இணைவது தொடர்பாக யாரும் பேசி இருக்கிறார்களா?
பதில்:– எங்களுடைய 2 நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடங்கும். இந்த 2 விஷயங்களுக்காகவும் அவர்கள் பேசாதது தான் இணைப்புக்கு தடையாக இருக்கிறது.
கேள்வி:– முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்திக்கிறார். டி.டி.வி.தினகரன் வருகிற 5–ந்தேதி தலைமை அலுவலகத்துக்கு வர இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தலைமை அலுவலகத்துக்கு செல்வது தொடர்பாக ஏன் முடிவு எடுக்கப்படவில்லை?
பதில்:– எங்களை பொறுத்தவரையில், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக தான் வரும் என நம்புகிறோம். அப்படி வந்தால் கட்சியை நடத்தும் பொறுப்பு அவைத்தலைவர், பொருளாளர், தலைமை கழக செயலாளருக்கு வரும். ஆகவே நாங்கள் தலைமை அலுவலகத்தை கைப்பற்ற வேண்டிய தேவை இல்லை. தொண்டர்கள் இருக்கும் இடம் தான் எங்களுக்கு கழகம்.
கேள்வி:– ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகுகிறதே?
பதில்:– ஊடகங்களினால் பரப்பப்படும் விஷயம். அதிருப்தி என்று யாரும் இல்லை. அது தவறு. என்னை பொறுத்தவரையில் இரு அணிகளும் இணைய வேண்டும். எங்கள் பக்கம் இருப்பவர்கள் யாரும் இணைப்பு கூடாது என்று சொல்லவில்லை.
கேள்வி:– மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறதே?
பதில்:– இந்த அரசாங்கத்தை பற்றி குற்றம் சொல்வதற்காக நாங்கள் டெல்லி செல்வது கிடையாது. தமிழக அரசு என்ன செய்வதற்கு திட்டம் வைத்து இருக்கிறார்களோ? அதை வலுசேர்க்கும் விதமாக தான் நாங்கள் செயல்படுகிறோம். ஆனால் அவர்கள் தவறான வழியில் போனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுவார். முதுகெலும்பு இல்லாமல் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு ஏற்கிறது என்பது தவறு.
கேள்வி:– ஓ.பன்னீர்செல்வம் அணியின் நிபந்தனைகளை நிறைவேற்றும் சூழல் இப்போது ஏற்பட்டு இருக்கிறதா?
பதில்:– 4 மாதங்களாக இந்த நிபந்தனைகளை தான் நாங்கள் கூறி வருகிறோம். தற்போது தான் அதற்கான சூழல் வந்து இருக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். நிபந்தனைகளை அவர்கள் இப்போது ஏற்றுக்கொண்டாலும் நான் வரவேற்பேன்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.