மலேசியாவில் எம்.ஜி.ஆர். உருவச்சிலை அடுத்த மாதம் திறப்பு விழா
நூற்றாண்டு விழாவினையொட்டி மலேசியாவில் நிறுவப்பட உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலையை வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கம் தயாரித்து வழங்கியது.
சென்னை,
வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கமும், மலேசியா டாக்டர் எம்.ஜி.ஆர். அனைத்துலக மாநாட்டு குழுவும் இணைந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை அடுத்த மாதம் (செப்டம்பர்) 9, 10-ந் தேதிகளில் கொண்டாட உள்ளன. இதையொட்டி மலேசியாவில் எம்.ஜி.ஆர். உருவச்சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலையை வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கம் தயாரித்துள்ளது.
சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.ஜி.ஆர். சிலையை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம், எம்.ஜி.ஆர். சிலையை மலேசியா டாக்டர் எம்.ஜி.ஆர். அனைத்துலக மாநாட்டு குழுவின் தலைவர் எஸ்.பி.மணிவாசகத்திடம் ஒப்படைத்தார்.
மலேசியாவில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவுவது குறித்து வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகை தமிழால் உயர்த்தும் நோக்கில் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் 30 திருவள்ளுவர் சிலைகள் அமைத்தும், திருக்குறள் மாநாடுகள் நடத்தியும் வருகிறோம். தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் சிலையும், தில்லையாடியில் அருணாச்சல கவிராயர் சிலையும், ஒட்டன்சத்திரம் அரசு பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் சிலையையும் நிறுவியுள்ளோம்.
அந்த வகையில் மனிதநேயமிக்க தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்க்கும் வகையில் மலேசியாவில், அவருடைய உருவச்சிலை நிறுவப்பட உள்ளது. 6½ அடி உயரம் உள்ள இந்த சிலையை கோலாலம்பூரில் நடைபெறும் விழாவில் மலேசிய நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் திறந்து வைக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கத்தின் இணை செயலாளர் வி.ஜி.பி.ராஜாதாஸ், பாபுஜி சுவாமி, எம்.ஜி.ஆரின் பேரன் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆர். சிலை ‘பைபர்’ மூலம் செய்யப்பட்டு, தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ள முதல் எம்.ஜி.ஆர். சிலை இதுவாகும்.