நீட் விவகாரம் மத்திய மந்திரிகளை சந்திக்க தமிழக அமைச்சர்கள் குழு டெல்லி பயணம்

நீட் விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரிகளை சந்திக்க தமிழக அமைச்சர்கள் குழு டெல்லி செல்கின்றனர்.;

Update: 2017-07-19 15:26 GMT
சென்னை,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்க  அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம், அன்பழகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் குழு டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர். நாளை  மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை சந்தித்து நீட் விவகாரம் தொடர்பாக வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் செய்திகள்