சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க கருணாநிதிக்கு விலக்கு தி.மு.க. தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க கருணாநிதிக்கு விலக்கு அளிக்க கோர தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது.
சென்னை,
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சட்டமன்ற உறுப்பினர் மு.கருணாநிதி உடல்நலம் குன்றி இருக்கிறார். அவர் உடல்நலம் பெறும் வரை பூரண ஓய்வு எடுக்க டாக்டர்கள் கூறியுள்ளனர். எனவே 14.6.17 முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது முதல் சட்டசபைக்கு வராமல் இருக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
இந்த தீர்மானம் அ.தி.மு.க. ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. இதன் மூலம் சட்ட சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க கருணாநிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.