சிறப்பு முகாம்கள் மூலம் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் யோசனை
சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., யோசனை தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைப் பொருட்களைப் பெறுவதற்கான ஸ்மார்ட் அட்டைகளை வழங்குவதில் அடுத்தடுத்து கேலிக்கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சரியான திட்டமிடாமல் அதிகாரிகள் செய்யும் குளறுபடிகளால், தகவல் தொழில்நுட்பம் குறித்த புரிதலோ, கணினி அறிவோ இல்லாத அப்பாவி பாமர மக்கள் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
படுதோல்வி
மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 1 கோடியே 95 கோடி லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், இதுவரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் 20 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 7 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன.
ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகும், மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது படுதோல்வி ஆகும்.
சிறப்பு முகாம்கள்
ஸ்மார்ட் அட்டை வழங்குவதில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம் அதிகாரிகளின் திட்டமிடாத போக்கு தான். அவர்களின் தவறுக்காக அப்பாவி மக்களை அவதிக்குள்ளாக்குவதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. அப்பாவி மக்களை இனியும் அலையவிடாமல், ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் ஒரு நாளைக்கு 100 பேர் மட்டும் பங்கேற்கும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்தி அவர்களுக்கு உடனடியாக ஸ்மார்ட் அட்டை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.