சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாடுகளில் லாக்கர் உடைந்து வைரங்கள் சிதறின
சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாடுகளில் இருந்த லாக்கர் கதவு உடைந்து உள்ளே இருந்த வைரங்கள் சிதறியுள்ளன.
சென்னை,
சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்த மே மாதம் 31-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் உருக்குலைந்தது. இதனால் அந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் நகை வியாபாரம் நடந்துவந்தது. அங்குள்ள வைரம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை ஒவ்வொரு நாளும் கடையை மூடும்போது தரைத்தளத்தில் உள்ள 2 லாக்கர்களில் பாதுகாப்பாக வைப்பது வழக்கம்.
அந்த கட்டிடம் தீப்பிடிப்பதற்கு முந்தைய நாள் இரவு அந்த லாக்கர்களில் வைரம், தங்கம், வெள்ளி பொருட்களை அந்த நிறுவனத்தினர் வைத்தனர். தீ அணைக்கப்பட்ட பின்னரும், கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்து இருந்ததால் உள்ளே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. அதன்பின்னர், கட்டிடம் இடிக்கப்பட்டதால் அந்த லாக்கர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கின.
42 நாட்களுக்கு பிறகு கடந்த 11-ந் தேதி தரைத்தளத்தில் இருந்த ஒரு லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த 400 கிலோ தங்க நகைகளை ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றொரு லாக்கரை மீட்பதில் சிக்கல் இருந்ததால், அன்றைய தினம் எடுக்க முடியவில்லை. 3 நாட்களுக்கு பிறகு நேற்று அந்த லாக்கர் இருக்கும் பகுதியை கண்டுபிடித்தனர்.
ஆனால் இடிபாடுகள் லாக்கர் மீது விழுந்ததில் அதன் கதவு உடைந்து திறந்துகிடந்ததாகவும், உள்ளே இருந்த வைரம், வெள்ளி பொருட்களில் சில இடிபாடு கழிவுகளுடன் கலந்து கிடந்ததாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். லாக்கரில் இருந்த பொருட்களை மட்டும் ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.
இடிபாடுகளில் கலந்துள்ள வைரம் மற்றும் வெள்ளி பொருட்களை சல்லடை போட்டு பிரித்து எடுக்கும் பணியில் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வெளிநபர்கள் யாரும் கட்டிட பகுதிக்குள் வரமுடியாதபடி, சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.