உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து 6 மாத காலத்துக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த சூழலில் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்த முறையான இடஒதுக்கீடு வழங்காத காரணத்தால் இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இன்னும் சரிவர முடிவுக்கு கொண்டு வரவில்லை. எனவே தமிழக அரசும், தமிழக தேர்தல் கமிஷனும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் ஒருங்கிணைந்து, ஒரு தலைப்பட்சமாக காலம் தாழ்த்துகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை விரைந்து நடத்திட முன்வர வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.