சென்னையில் மாயமான 3 சிறுவர்கள் வாழப்பாடியில் மீட்பு
சென்னையில் மாயமான 3 சிறுவர்கள் வாழப்பாடியில் மீட்கப்பட்டனர். அவர்கள் கடத்தப்பட்டது ஏன்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வபூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜி. சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் பெரியம்மாள். இவர் தன் கணவர் குமாரை பிரிந்து விஜியுடன் சேர்ந்து வாழ்கிறார். குமாருக்கு பிறந்த குழந்தைகளான சஞ்சய் (வயது 10), அஜய் (7), விஜய்பிரதாபன் (4) ஆகியோர் பெரியம்மாளுடன் உள்ளனர்.
இந்நிலையில் சஞ்சய் உள்ளிட்ட 3 சிறுவர்களும் நேற்று காலை வழக்கம் போல் ஆற்காடு சாலையில் உள்ள அரசு பள்ளிக்கு சென்றனர். கடைசி மகனை அழைத்து வர பெரியம்மாள் மதியம் பள்ளிக்கு சென்றார். அப்போது மகன்கள் 3 பேரும் பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தனிப்படைகள் அமைப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த பெரியம்மாள் இது குறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், தினமும் பள்ளிக்கு செல்லும் 3 பேரையும் ஸ்ரீதேவி குப்பம் மெயின்ரோட்டில் சிறிது தூரம் கொண்டு வந்து பெரியம்மாள் விட்டு செல்வார் என்றும், பிறகு 3 பேரும் அந்த வழியே வரும் வாகனங்களில் யாரிடமாவது ‘லிப்ட்’ கேட்டு பள்ளிக்கு அருகில் இறங்கி கொள்வார்கள் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். அப்போது அந்த வழியே வந்த ஒரு ஆட்டோவில் 3 சிறுவர்களும் சென்றது தெரிந்தது. உடனே அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்த போது 3 பேரும் ஆட்டோவில் ஏறி சென்றது தெரிந்தது. இதனால் மாயமான சிறுவர்களை மீட்க உதவி கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர் ஆல்வின், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
வாழப்பாடியில் மீட்பு
இதனிடையே பெரியம்மாளின் சொந்த ஊரான வாழப்பாடி போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் இது குறித்து தகவல் தெரிவித்தனர். உடனே வாழப்பாடி போலீசார், பெரியம்மாளின் கணவர் குமாரிடம் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு 3 சிறுவர்களும் இருந்தது தெரியவந்தது. உடனே அவர்களை வாழப்பாடி போலீசார் மீட்டனர்.
இது தொடர்பாக வளரவாக்கம் போலீசுக்கு, வாழப்பாடி போலீசார் தெரிவித்தனர். உடனே 3 சிறுவர்களையும் மீட்டு சென்னை கொண்டு வர வளசரவாக்கம் போலீசார் வாழப்பாடிக்கு நேற்று விரைந்து சென்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே 3 சிறுவர்களும் எதற்காக கடத்தப்பட்டார்கள்? என தெரியவரும். அதன் பிறகே இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.