சென்னை சில்க்ஸ் கட்டிடம்:மண்ணுக்குள் புதைந்த 400 கிலோ தங்க நகைகள் மீட்பு
தீ விபத்தில் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தரை தளத்தில் மண்ணுக்குள் புதைந்த 400 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.
சென்னை,
சென்னை தியாகராயநகரில் இருந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் மே 31-ந் தேதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு தகுதியற்றது என்று கூறி அரசு அதை இடிக்க உத்தரவிட்டது. அதன்படி, கடந்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி இடிக்கும் பணி தொடங்கி 20-ந் தேதி கட்டிடம் முழுவதும் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.
கட்டிடத்தின் 6-வது தளத்தில் ஒரு லாக்கரும், தரை தளத்தில் 2 லாக்கரும் என மொத்தம் 3 லாக்கர்கள் இருந்தன. இதில் தரை தளத்தில் இருந்த 2 லாக்கர்களில் தான் கடையில் இருந்த வைரம், தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது.
கட்டிடத்தின் முகப்பு பகுதியை இடிக்கும் போது 6-வது தளத்தில் இருந்த லாக்கர் இடிபாடுகள் மேல் விழுந்தது. அந்த லாக்கர் 22-ந் தேதி மீட்கப்பட்டது. அதில் முக்கிய ஆவணங்கள் மட்டும் இருந்ததாகவும், தீ விபத்தில் ஆவணங்கள் லேசாக சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கட்டிடத்தை இடிக்கும் போது தரை தளத்தில் இருந்த 2 லாக்கர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டதால் அதை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் தரை தளத்தில் இருந்த லாக்கரை எடுக்கும் பணி சில நாட்களாக நடந்து வந்தது. இடிபாடுகளில் இருந்து லாக்கரை அப்படியே வெளியே எடுக்க முடியாததால், லாக்கரில் இருந்த வைரம், தங்க நகை, வெள்ளியை வெளியே எடுக்கும் முயற்சி நடைபெற்றது.
இதற்காக ‘ஜா கட்டர்’ உதவியுடன் இடிபாடுகளை அகற்றி தரை தளத்துக்கு செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. பின்னர் தரை தளத்தில் இருந்த 2 லாக்கரில் ஒரு லாக்கர் திறக்கப்பட்டது. அதில் தங்க நகைகள் மட்டும் இருந்தன. இரும்பு பெட்டியை உள்ளே கொண்டு சென்று தங்க நகைகளை அதில் வைத்து ஊழியர்கள் வெளியே கொண்டு வந்தனர். மண்ணுக்குள் புதைந்து கிடந்த லாக்கரில் இருந்து 42 நாட்களுக்கு பிறகு தங்க நகைகள் மீட்கப்பட்டன.
சுமார் 20 முதல் 25 இரும்பு பெட்டியில் வைக்கப்பட்ட தங்க நகைகளை, வாகனத்தின் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் கொண்டு சென்றனர். அந்த தங்க நகைகளின் எடை 400 கிலோவுக்கு மேல் இருக்கும் என அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
தரை தளத்தில் உள்ள மற்றொரு லாக்கரில் வைரம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளன. அவற்றை மீட்க இன்னும் 3 நாட்கள் ஆகும் என்றும், அதற்கான பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் அங்கு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.