அதிமுக அம்மா கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் மேலும் ஒரு எம்.எல்.ஏ சந்திப்பு
அதிமுக அம்மா கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மேலும் ஒரு எம்.எல்.ஏ சந்தித்துள்ளார்.
சென்னை,
சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி. தினகரனை அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கடந்த சில நாட்களாக சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 35 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ விபி. சிவசுப்ரமணி, டிடிவி தினகரனை இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.