மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தினையும் அரசு அனுமதிக்காது; முதல் அமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தினையும் அரசு அனுமதிக்காது என தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
காஞ்சிபுரம்,
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வினால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ள தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தினையும் அரசு அனுமதிக்காது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழை, எளிய மக்களை பாதிக்காது என்றும் கூறியுள்ளார்.