அவதூறு வழக்கு தொடரும் எண்ணத்தை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
அரசியல் கட்சிகள் மீது அவதூறு வழக்கு தொடரும் எண்ணத்தை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ஜனநாயகத்தின் இரு பக்கங்கள். எனவே அரசியல் கட்சிகள் மீது அவதூறு வழக்கு தொடரும் எண்ணத்தை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அதிர்ச்சி
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் ஆணையம் பற்றி அவதூறு பரப்புகின்றவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971-ன் கீழ் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கேற்ற வகையில் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு வெற்றிவாய்ப்பு கிட்டும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சுமத்தியிருந்த நிலையில், இது போன்றதொரு கோரிக்கையை தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு வைத்திருப்பது சற்றும் எதிர்பாராத ஒன்றாக அமைந்திருக்கிறது.
முழு சுதந்திரம்
தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால், தேர்தல் ஆணையத்தின் பணிகளில் குறுக்கிடக்கூடாது என்று உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் ஒதுங்கி நின்று தேர்தல் ஆணையத்திற்கு முழு சுதந்திரத்தை அளித்திருக்கின்றன. இவ்வளவு சுதந்திரங்களும் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டு இருப்பதன் நோக்கமே சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று என அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களும், உச்சநீதிமன்றமும் கருதியதால் தான்.
2014 பாராளுமன்ற தேர்தலிலும், 2016 சட்டமன்ற தேர்தலிலும் மாநிலத்தில் நடக்கும் அ.தி.மு.க. ஆட்சியின் தேர்தல் முறைகேடுகளை சுட்டிக்காட்டி தி.மு.க. சார்பில் எத்தனையோ புகார்கள் கொடுக்கப்பட்டன. அந்த புகார்கள் மீது எல்லாம் ஆணையத்திற்கு உள்ள அதிகாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டதா? என்ற நியாயமான கேள்வி எழாமல் இல்லை.
கருப்பு ஆடு யார்?
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தார் என்று சொல்லி ஒருவரை (டி.டி.வி.தினகரன்) டெல்லி போலீசார் கைது செய்தபிறகு, இன்று வரையிலும் தேர்தல் ஆணையத்தில் அப்படி லஞ்சம் பெறுவதற்கு தயாராக இருந்தவர் யார் என்பது பற்றிய உண்மை மறைக்கப்பட்டு வருகிறது.
தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையத்திற்குள் இருக்கும் அந்த ‘கருப்பு ஆடு’ யார் என்பது பற்றி, மத்திய அரசிடமோ அல்லது டெல்லி காவல்துறையிடமோ இந்திய தேர்தல் ஆணையம் கேட்டதாக இதுவரை செய்திகள் வரவில்லை.
புரியாத புதிர்
‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சியில் தற்போது வெளிவந்துள்ள அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சரவணனின் உரையாடலில், ‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படும் என்று 15 நாட்களுக்கு முன்பே எங்களுக்கு தெரியும். பா.ஜ.க. தரப்பில் கூறினார்கள் என்று வெளிப்படையாக கூறியிருப்பது பேரதிர்ச்சியை ஏற் படுத்தி இருக்கிறது.
இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்தி வைக்கப்போவது பற்றி 15 நாட்களுக்கு முன்பே ஒரு அரசியல் கட்சிக்கு எப்படி தெரியும் என்பது புரியாத புதிராகவே இருந்து இருக்கிறது.
இரு பக்கங்கள்
ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. தேர்தல் ஆணையமோ ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாக விளங்கும் தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றிருக்கிறது. ஆகவே, தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் ஜனநாயகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதுதான் சாலப் பொருத்தமானது.
எனவே அரசியல் கட்சிகள் மீது அவதூறு வழக்கு தொடரும் அதிகாரம் கேட்கும் எண்ணத்தை, நாட்டில் நிலைத்து நிற்க வேண்டிய ஆரோக்கியமான ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும்.
ஜனநாயகத்தை போற்றி பாதுகாக்கும் உன்னதப்பணியில் இந்திய தேர்தல் ஆணையம் எவ்வித அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் இடம் கொடுக்காமல், தொடர்ந்து தன்னாட்சி அதிகாரத்துடன் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.