மதுக்கடையை மூட வலியுறுத்தி தலைமை செயலகம் நோக்கி பாரதீய ஜனதா பேரணி
மதுக்கடையை மூட வலியுறுத்தி தலைமை செயலகம் நோக்கி பாரதீய ஜனதா பேரணி நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சென்னை,
டாஸ்மாக் கடையை மூடக்கோரி பா.ஜனதா சார்பில் சென்னையில் இன்று தலைமை செயலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. சேப்பாக்கத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய செயலாளர் முரளிதரராவ் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
பேரணியில் கலந்து கொணடவர்கள் மதுவால் ஏற்படும் சீரழிவை வலியுறுத்தும் வகையில் பாடை கட்டியும், வெள்ளை சேலை கட்டி பெண்களும் கலந்து கொண்டனர்.பின்னர் அனைவரும் கோட்டையை நோக்கி புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட 1,500 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.