தமிழக சட்டசபையில் சரக்கு, சேவை வரி மசோதா தாக்கல்
தமிழக சட்டசபையில் சரக்கு, சேவை வரி மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.;
சென்னை,
மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்துகிறது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, அதில் பல்வேறு திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று கூறி வந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தற்போதுள்ள தமிழக அரசு அப்படியே ஏற்றுக் கொண்டது. ஆனால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பைக் குறைக்க வேண்டும் என்று வர்த்தகர்களின் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
சட்டமுன்வடிவு தாக்கல்
இந்த நிலையில், தமிழக சட்டசபையில் தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்ட முன்வடிவை வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்ட முன்வடிவு மூலம் தமிழகத்துக்கு கிடைக்கும் அம்சங்கள் வருமாறு:–
மக்களுக்கான மதுபான விற்பனையை தவிர்த்து, மாநிலத்துக்குள் சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்கினால், அவை அனைத்தின் மீதும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தால் 20 சதவீதத்துக்கு மேற்படாமல் வரி விதிப்பது.
கச்சா பெட்ரோலியம், அதிவேக டீசல், பெட்ரோல், மோட்டார் ஸ்பிரிட், இயற்கை எரிவாயு, வானூர்தி எந்திர எரிபொருள் ஆகிய சரக்குகளின் விற்பனை மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பதற்கு இந்த மன்றம் எந்தத் தேதியை பரிந்துரைக்கிறதோ, அதுவரை தமிழ்நாடு மதிப்புக்கூட்டுவரி–2006 சட்டத்தின்படி தொடர்ந்து அவற்றின் மீது வரி வசூலிப்பது.
கைது நடவடிக்கை
மன்றத்தின் பரிந்துரை, அறிவிப்பு அல்லது தனி உத்தரவுகள் மூலம் வரிவிலக்கு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளித்தல்.
சரக்குகள், சேவைகள் அல்லது இவை இரண்டும் வழங்கியதற்காக செலுத்தப்பட்ட வரிகளுக்கு உள்ளீட்டு வரி வரவை பரவலாக கிடைக்கச் செய்தல்.
சரக்குகள், சேவைகள் வழங்குவோர் அவர்களின் வலைத்தளம் மூலமாக செலுத்தும் வரியின் நிகர மதிப்பில் ஒரு சதவீதத்துக்கும் மேற்படாத தொகையை வசூலிக்க மின்னணு வர்த்தகம் நடத்துவோரை கட்டாயப்படுத்துதல்.
பதிவு செய்துள்ள நபர்கள் செலுத்தவேண்டிய வரிகளை சுயமதிப்பு செய்வதற்கும்; தற்காலிக, சுருக்குமுறை மற்றும் நியாயமான முறையில் ஆய்வு செய்து, வரிக்கணிப்பு, தணிக்கை செய்வதற்கும் வகை செய்தல்.
வரி செலுத்தத் தவறுகிற நபரின் சரக்குகளையும், அசையும் மற்றும் அசையாச் சொத்துகளையும் கைப்பற்றி விற்பனை செய்வது உள்பட பல்வேறு முறைகளை பயன்படுத்தி வரி மற்றும் நிலுவைத் தொகையை வசூலிக்க வகை செய்தல்.
வரி வசூலிப்பு விவகாரத்தில் ஆய்வு செய்தல், சோதனையிடுதல், கைப்பற்றுதல், கைது செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அதிகாரம் அளிப்பது.
அதிகார அமைப்புகள்
வரி தொடர்பான வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை எதிர்த்து அப்பீல் செய்வதற்காக, மத்திய சரக்குகள் மற்றும் சேவை வரிச்சட்டத்தின்படி நிறுவப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகுதல்.
சரக்குகள், சேவைகள் வழங்குவது அல்லது இந்த இரண்டையும் வழங்குவது தொடர்பாக வரும் பிரச்சினைகள் மீது முடிவு செய்வதற்கு முன்பு, அதன் தீர்வுக்காக அதிகார அமைப்பு ஒன்றையும், மேல்முறையீட்டு அதிகார அமைப்பு ஒன்றையும் அமைத்தல்.
அறிமுகம்
இந்த சட்டத்தை மீறுவோருக்கு விதிக்கும் தண்டனைகளை வகை செய்தல்; வரி செலுத்துவோரை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி முறைக்கு ஏதுவாக சீராக மாற்றம் செய்வதற்கு காலவரைமுறைக்கு வகை செய்தல் ஆகிய சிறப்பு அம்சங்களை முன்வைத்து, தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டமசோதாவை அமைச்சர் கே.சி.வீரமணி அறிமுகம் செய்தபோது, வேறு ஒரு பிரச்சினையில் அமளி நடந்து கொண்டிருந்ததால், இந்த மசோதாவை ஆரம்ப நிலையில் எந்த கட்சியும் எதிர்க்க முடியாமல் போய்விட்டது.
இனி இந்த மசோதா, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அப்போது தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்கும் என்று தெரிய வருகிறது.