கூவத்தூர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை தேவை கனிமொழி எம்.பி., பேட்டி
தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., நேற்று மதியம் 1.15 மணியளவில் சந்தித்தார்.
சென்னை,
ராயபுரம் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., நேற்று மதியம் 1.15 மணியளவில் சந்தித்தார். அப்போது கனிமொழி எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:–
கூவத்தூர் சொகுசு விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை. இதுபற்றி சட்டசபையில் விவாதிக்க அனுமதி வழங்கப்படாதது ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று.
மு.க.ஸ்டாலினை பேச கூடாது என்று நிராகரித்ததுடன் இப்படி நடந்திருப்பது (வெளியேற்றம், கைது) ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். முன்பே சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தெளிவாக கூறியும் ரகசிய வாக்கெடுப்பு நடக்கவில்லை. அதன் விளைவை தான் தற்போது நாம் பார்க்கிறோம்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட தி.மு.க. நிர்வாகிளும் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.