மதுரையில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை: ஜெயலலிதாவின் விருப்பம் என பன்னீர் செல்வம் பேட்டி

மதுரையில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம் என்று முன்னாள் முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.

Update: 2017-06-11 11:33 GMT
மதுரை,

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் செய்தியார்களிடம் கூறியதாவது:

மதுரையில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கருதினார். அவரது விருப்பமும் அதுவே. தமிழக அரசு, மதிப்புகூட்டு வரியை ஒரு சதவீதமாக குறைக்க வேண்டும். முத்திரைத்தாள் கட்டணத்தையும், மதிப்புகூட்டு வரியையும் மத்திய அரசு நிர்ணயித்தபடி பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்