இன்று தேர்தல் நடைபெற்றாலும் மோடியே மீண்டும் பிரதமராக வருவார் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு
இன்று தேர்தல் நடைபெற்றாலும் மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறினார்.
சென்னை
மத்திய அரசின் 3 ஆண்டுகள் சாதனையை விளக்கும் புகைப்பட கண்காட்சியை வேளச்சேரி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தொடங்கி வைத்தார்
விழாவில் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள பலர் வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளனர்.இன்று தேர்தல் நடைபெற்றால், மோடியே மீண்டும் பிரதமராக வருவார்.பாஜக ஊழல்,முறைகேடுகள் இல்லாமல் 3ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளது.அடுத்த 5 ஆண்டுகளுக்கும் மோடி அரசே தொடர மக்கள் விருப்பம்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைபோல் நாங்கள் ஊழல் செய்யவில்லை.
3ஆண்டுகளுக்கு முன் நிலம்,காற்று என அனைத்திலும் ஊழல் நடந்தது.மத்திய அரசே மாநிலங்களுக்குச் சென்று சேவை செய்து வருகிறது. மாநில அரசுடன் இணைந்து பணியாற்றவே தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.மாநிலத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு உதவும்.
இவ்வாறு கூறினார்.