மத்திய அரசின் அறிவுரைப்படி முத்திரை மற்றும் பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் மனைகளுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் மனைகளுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள இத்திட்டத்தால் மக்களுக்கு சில நன்மைகள் கிடைக்கக் கூடும். அதே நேரத்தில் பதிவுக் கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் நேர்மையாக சொத்து மதிப்பை காட்ட விரும்புபவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட பயனை பதிவுக்கட்டண உயர்வு அழித்து விடும். இதனால் பயனில்லை.
அதுமட்டுமின்றி, சில இடங்களில் சொத்துகளின் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பைவிட அதிகமாக உள்ளது. சந்தை மதிப்பின்படி சொத்துக்களை வாங்குபவர்கள் நேர்மையான முறையில் சொத்து மதிப்பை காட்ட நினைத்தால் அவர்கள் வழக்கத்தைவிட 4 மடங்கு அதிகமாக பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது நேர்மையாக செயல்பட நினைப்பவர்களுக்கு தேவையற்ற பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, சொத்துக்களைப் பதிவு செய்வதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியாக 4 சதவீதம் முத்திரைக் கட்டணம், ஒரு சதவீதம் பதிவுக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதை ஏற்று தமிழகத்தில் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.