என்ஜினீயரிங் படிப்புக்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 விண்ணப்பங்கள்

தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. சேர்ந்து படிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை வருடந்தோறும் நடத்தி வருகிறது.

Update: 2017-06-09 17:53 GMT
சென்னை,

தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. சேர்ந்து படிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை வருடந்தோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க கடந்த மே மாதம் 1–ந்தேதி முதல் மாணவ–மாணவிகள் ஆன்லைனில் பதிவு செய்தனர். அவர்கள் பதிவு செய்து பிளஸ்–2 மதிப்பெண்களை நிரப்பி அந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இதற்கான கடைசி நாள் கடந்த 3–ந்தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்பங்களை தினமும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் எண்ணி வந்தனர். நேற்று இறுதியாக விண்ணப்பங்களை எண்ணி பார்த்தனர். 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 விண்ணப்பங்கள் வந்திருப்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்