புதுக்கோட்டை அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த தி.மு.க எம்.எல்.ஏக்கள் 3 பேர் கைது

முதல்வர் கலந்து கொண்ட அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த தி.மு.க எம்.எல்.ஏக்கள் 3 பேர் கைது செய்யபட்டனர்.

Update: 2017-06-09 08:45 GMT
சென்னை

புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், பாராளுமன்ற துணை சபாநாயாகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க எம்.எல்.ஏக்கள் ரகுபதி, பெரியண்ணன், சிவ மெய்ய நாதன் ஆகியோர் வந்தனர். மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக  3 எம்.எல்.ஏ.க்களும் மாவட்ட தி.மு.க.  அலுவலகத்தில் இருந்து  புறப்பட்டனர்.  ஆனால் அவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகள் விழாவுக்கு நீங்கள் வரவேண்டாம், வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி தடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  மேலும் புதுக்கோட்டை பிருந்தாவனம் சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார்  3 எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.   முதல்-அமைச்சர் செல்லும்  சாலையில் மறியலில்  ஈடுபட்டதால் 3   எம்.எல்.ஏ.க்கள்  கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

மேலும் செய்திகள்