ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்தால் வெற்றி பெறுவரா? தந்தி டி.வி. கருத்து கணிப்பு
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்தால் வெற்றி பெறுவரா? என்பது பற்றி தந்தி டி.வி. நடத்திய கருத்து கணிப்பில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடவேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், “ஆண்டவன் விரும்பினால் நான் அரசியலுக்கு வருவேன்“ என்று அவர் கூறி வருகிறார். சமீபத்தில் அவர் தனது ரசிகர்களை சந்தித்து பேசினார். மீண்டும் ரசிகர்களை சந்தித்து பேச போவதாக அவர் கூறி இருக்கிறார்.
இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
இது தொடர்பாக தந்தி டி.வி.யின் சார்பில் தமிழக மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
அந்த கருத்து கணிப்பில் வெளியான தகவல்கள் வருமாறு:–
(கருத்து தெரிவித்தோர் பற்றிய விவரம் சதவீதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன?வரவேற்கிறேன் –44
எதிர்க்கிறேன் –39
கருத்து இல்லை –17
ரஜினிகாந்த் அரசியலில் வெற்றி பெற முடியும் என்று கருதுகிறீர்களா?வெற்றி பெறுவார் –47
மாட்டார் –39
கருத்து இல்லை –14
அரசியலில் ஈடுபட்டால் ரஜினிகாந்த் செய்ய வேண்டியது என்ன?தேசிய கட்சியில் இணைப்பு –10
மாநில கட்சியில் இணைப்பு –26
புதிய கட்சி –64
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் கன்னடர் என்ற முத்திரை அவரது வளர்ச்சியை பாதிக்குமா?பாதிக்கும் –38
பாதிக்காது –50
கருத்து இல்லை –12
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் முதல்–அமைச்சராகும் அளவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா?அதிக வாய்ப்புள்ளது –42
அதிக வாய்ப்பு இல்லை –46
கருத்து இல்லை –12
மீண்டும் ஒரு சினிமா நட்சத்திரத்தை முதல்–அமைச்சராக தமிழக மக்கள் தேர்வு செய்வார்களா?ஆம் –44
இல்லை –40
கருத்து இல்லை –16