2018–ம் ஆண்டுக்கான 10, 11, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை; அரசு தேர்வுத்துறை வெளியிட்டது

2018–ம் ஆண்டுக்கான 10, 11, 12–ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2017-06-06 20:44 GMT

சென்னை,

தமிழகத்தில் 10 மற்றும் 12–ம் வகுப்புகளுக்கு மட்டுமே இதுவரை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த கல்வி ஆண்டு முதல் 11–ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது.

மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தயார்செய்யும் வகையில் பொதுத்தேர்வு கால அட்டவணையும், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளையும் அரசு தேர்வுத்துறை இப்போதே வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–

பிளஸ்–2

பிளஸ்–2 பொதுத்தேர்வு கால அட்டவணை வருமாறு:–

மார்ச் 1–ந்தேதி – தமிழ் முதல் தாள்.

2–ந்தேதி – தமிழ் இரண்டாம் தாள்.

5–ந்தேதி – ஆங்கிலம் முதல் தாள்.

6–ந்தேதி – ஆங்கிலம் இரண்டாம் தாள்.

9–ந்தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

12–ந்தேதி – கணிதம், விலங்கியல், மைக்ரோ–பயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயடெடிக்ஸ்

15–ந்தேதி – அனைத்து தொழில் கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

19–ந்தேதி – இயற்பியல், பொருளாதாரம்.

26–ந்தேதி – வேதியியல், கணக்கு பதிவியல்.

ஏப்ரல் 2–ந்தேதி – உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.

6–ந்தேதி – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்.

தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது.

பிளஸ்–1

பிளஸ்–1 பொதுத்தேர்வு கால அட்டவணை வருமாறு:–

மார்ச் 7–ந்தேதி – தமிழ் முதல் தாள்.

8–ந்தேதி – தமிழ் இரண்டாம் தாள்.

13–ந்தேதி – ஆங்கிலம் முதல் தாள்.

14–ந்தேதி – ஆங்கிலம் இரண்டாம் தாள்.

20–ந்தேதி – கணிதம், விலங்கியல், மைக்ரோ–பயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயடெடிக்ஸ்.

23–ந்தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

27–ந்தேதி – இயற்பியல், பொருளாதாரம்.

ஏப்ரல் 3–ந்தேதி – வேதியியல், கணக்கு பதிவியல்.

9–ந்தேதி – உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.

13–ந்தேதி – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்.

16–ந்தேதி – அனைத்து தொழில் கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணிக்கு முடிவடைகிறது.

எஸ்.எஸ்.எல்.சி.

10–ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வருமாறு:–

மார்ச் 16–ந்தேதி – தமிழ் முதல் தாள்.

21–ந்தேதி – தமிழ் இரண்டாம் தாள்.

28–ந்தேதி – ஆங்கிலம் முதல் தாள்.

ஏப்ரல் 4–ந்தேதி – ஆங்கிலம் இரண்டாம் தாள்.

10–ந்தேதி – கணிதம்.

12–ந்தேதி – மொழி விருப்பப்பாடம்.

17–ந்தேதி – அறிவியல்.

20–ந்தேதி – சமூக அறிவியல்.

தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணிக்கு முடிவடைகிறது.

தேர்வு முடிவு

மாணவர்கள் எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தயார் செய்யும் வகையில் தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படுகிறது. பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடும் தேதி 16.5.2018. பிளஸ்–1 தேர்வு முடிவு வெளியிடும் தேதி 30.5.2018. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடும் தேதி 23.5.2018.

இந்த தகவல்களை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்