122–வது பிறந்தநாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

காயிதே மில்லத் 122–வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

Update: 2017-06-05 23:45 GMT

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில், தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் போர்வை செலுத்தி, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் ஜெயக்குமார், செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், காமராஜ், ஓ.எஸ்.மணியன், தங்கமணி, செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, பென்ஜமின், எம்.சி.சம்பத், நிலோபர் கபில், மணிகண்டன், ராஜலட்சுமி, வளர்மதி, சரோஜா, கே.சி.வீரமணி உள்பட அமைச்சர்கள், அன்வர்ராஜா, டாக்டர் ஜெ.ஜெயவர்தன் உள்பட எம்.பி.களும், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில–மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சி சார்பில் அக்கட்சியின் பொருளாளரும், தமிழக முன்னாள் முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இதில் கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பாண்டியராஜன், மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. சார்பில் கட்சியின் செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கு.க.செல்வம், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

அவருடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் மற்றும் நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ்–த.மா.கா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் எம்.பி. ஆரூண், மாநில விவசாய அணி செயலாளர் சங்கரபாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.கே.அகமது அலி மற்றும் நடிகர் கே.ராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் துணைத்தலைவர் ஞானதேசிகன், கொட்டிவாக்கம் முருகன், காயல் இத்ரீஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ந.செல்லதுரை, பாவலன், ம.தி.மு.க. சார்பில் கட்சியின் சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி, உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.செங்குட்டுவன், மாவட்ட தலைவர் ஜீவன், தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, விசாகராஜன், செந்தில்நாதன், தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிற அமைப்புகள்

அகில இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.அபுபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஒய்.ஜவஹர் அலி, தமிழ் மாநில தேசிய லீக் செயலாளர் ஜி.சம்சுதீன், தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் எம்.எம்.ஆர்.மதன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்