மதசார்பற்ற ஆட்சியை உருவாக்க ஒன்று சேருவோம் தேசிய தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
நாட்டில் மதசார்பற்ற ஆட்சியை உருவாக்க ஒன்று சேருவோம் என்றும் தேசிய தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.;
சென்னை,
காவி நாடாக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும், நாட்டில் மதசார்பற்ற ஆட்சியை உருவாக்க ஒன்று சேருவோம் என்றும் தேசிய தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபை வைர விழாவில், நிறைவாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
80 ஆண்டு கால பொது வாழ்வு
1957-ம் ஆண்டு முதன் முதலில் தி.மு.க. சட்டமன்ற தேர்தலில் போட்டிபோடும் போது, கருணாநிதிக்கு அண்ணா ஆணையிட்டு, குளித்தலை தொகுதியில் போட்டியிட சொன்னார். அவரும் அங்கே வேட்பாளராக நின்றார். குளித்தலை சென்றார், நின்றார், அந்த தொகுதியில் வென்றார். அதன் பிறகு நடந்த 13 சட்டசபை தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, தோல்வி என்பதையே பார்க்காமல், வெற்றியை மட்டுமே பார்த்த தலைவர் ஒருவர் இந்தியாவில் உண்டு என்றால், அவர் கருணாநிதி தான்.
தி.மு.க. தலைவராக 48 ஆண்டுகள் இருந்து இந்த இயக்கத்தை வழிநடத்துகிறார். தமிழக முதல்-அமைச்சராக 19 ஆண்டு காலம் இருந்து அதிலும் சாதனை படைத்திருக்கிறார். திராவிட இயக்கம் இன்று 100 ஆண்டை கண்டிருக்கிறது. இதில் 80 ஆண்டுகால பொது வாழ்வை கடந்தவர் கருணாநிதி. அவருக்காக இன்று விழா எடுக்கப்பட்டிருக்கிறது.
பன்முகத்தன்மையில் நம்பிக்கை
நாம் இன்று ஒரு ஏக்கத்தோடு இருக்கிறோம். தலைவர்கள் அமர்ந்திருக்கும் இந்த மேடையில் தலைவர் கருணாநிதி அமரவில்லையே என்ற ஏக்கம் நமக்கு இருக்கிறது. அது, ஏன் என்று உங்களுக்கும் தெரியும். உடல்நலிவுற்று வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர், ஓரளவு தெளிவுபெற்ற நிலையில், விழாவுக்கு அழைத்துவர விரும்பினோம். மருத்துவர்களிடம் கேட்டபோது, இந்த நிலையில் விழாவுக்கு அழைத்து சென்றால், நோய் தொற்று ஏற்படும், எனவே அழைத்து செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டனர். விழாவுக்கு அவர் வரவில்லை என்பதை நாம் தாங்கிக்கொள்கிறோம். அவர் தொடர்ந்து நம்மை வழிநடத்த வேண்டும்.
கருணாநிதி தலைமையில் நடக்கும் தி.மு.க.வானது, இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த இயக்கம். மாநில உரிமைக்காக போராடும் இயக்கம். மதசார்பற்ற தன்மைக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடும் இயக்கம். விவசாயிகள், தொழிலாளர்களுக்காக போராடும் இயக்கம். தேசிய ஒருமைப்பாட்டிலும், நாட்டின் பன்முகத்தன்மையிலும் நம்பிக்கை கொண்டிருக்கும் இயக்கம்.
கலங்கரை விளக்கம்
இந்தியாவுக்கு எத்தனை பிரதமர்களை கருணாநிதி உருவாக்கி தந்திருக்கிறார். எத்தனை பிரதமர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கிறார். இந்திராகாந்தியை பிரதமராக்கினார். வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய் ஆகியோரை பிரதமராக்க பாடுபட்டவர். மன்மோகன்சிங்கை பிரதமராக வைத்து அழகுபார்த்தவர். ஜனாதிபதியை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர். தேசிய அரசியல் திசையை நிர்ணயிக்கும் கலங்கரை விளக்கம் கருணாநிதி.
இன்று மத்தியில் 3 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி நிறைவு பெற்றிருக்கிறது. அவர்கள் மக்களை பற்றி கவலைப்படுகிறார்களா?, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை பெற்றதால், எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாமா?. நான் கேட்க விரும்புவது, தேர்தலை நீங்கள் சந்தித்த நேரத்தில், மக்களிடம் அளித்த உறுதிமொழி என்ன?. தேர்தல் அறிக்கையில் சொன்னீர்களே. ‘டிரீம் இந்தியா’ திட்டத்தை மாநில முதல்-மந்திரிகளை ஒருங்கிணைத்து தொடங்கப்படும் என்றார் களே. தொடங்குனீர்களா?.
மத தலைவர்களை ஆளவைக்க திட்டம்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று உறுதிமொழி அளித்தீர்களே. அது என்ன வாயிற்று. கருப்பு பணத்தை மீட்போம் என்றீர்கள். முடிந்ததா?. கருப்பு பணத்தை பறிமுதல் செய்து, இந்தியர்கள் வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் போடுவோம் என்றீர்கள். 15 ரூபாயையாவது வங்கி கணக்கில் போட்டார்களா?. இல்லை. லோக்பால் உருவாக்கப்படும் என்றீர்கள். அது உருவாகி இருக்கிறதா?.
கடந்த 3 ஆண்டுகளாக பா.ஜ.க. எதையும் செய்யவில்லை. எதை பற்றியும் கவலைப்படவும் இல்லை. அதை மூடி மறைக்க ரூபாய் நோட்டு செல்லாது, மாட்டு இறைச்சிக்கு தடை என்ற நிலையில் தான் பா.ஜ.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நான் மீண்டும் வலியுறுத்த விரும்புவது, மத்திய பா.ஜ.க. அரசு, மதசார்புள்ள நாடாக இந்தியாவை மாற்ற படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தையும் மத தலைவர்கள் ஆளவேண்டும் என்று திட்டமிட்டு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது.
லட்சியம், கொள்கை முக்கியம்
இந்தியாவின் ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை என்று வரும்போது நாங்கள் ஒன்று படுவோம். நமக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், நாட்டை காப்பாற்றுவதில் கருத்து வேறுபாடு இல்லை. இந்த ஏதேச்சதிகார போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்.
கருணாநிதி இன்று உடல்நலத்தோடு இருந்திருந்தால், மத்திய அரசின் போக்கிற்கு குரல் கொடுக்கும் தலைவராக இருந்திருப்பார். இந்திய அளவிலான போராட்டத்திற்கு நமக்கு வழிகாட்டி இருப்பார். தி.மு.க.வை பொறுத்தவரை ஆட்சி முக்கியம் அல்ல. லட்சியம், கொள்கை தான் முக்கியம். மத்திய அரசு சொல்வதற்கு ஆளும் பொம்மை அல்ல தி.மு.க.
ஒன்று சேருவோம்
அப்படி இருந்திருந்தால், தமிழகத்தில் 1976-ம் ஆண்டு நெருக்கடி நேரத்தில் நாம் ஆட்சியை காப்பாற்றி இருக்க முடியாதா?. ஆட்சியை பற்றி அன்று கவலைப்படவில்லையே. இலங்கை தமிழர்களுக்காக ஆட்சி பறிபோகவில்லையா?. கொள்கை, லட்சியத்தில் இருந்து என்றும் தி.மு.க. பின்வாங்கியதில்லை. எதிர்க்கட்சிகளை அழிக்க பா.ஜ.க. காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது. காவி நாடாக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் இணைந்திருக்கிறோம். நாட்டில் மதசார்பற்ற ஆட்சியை உருவாக்க ஒன்று சேருவோம்.
மாட்டு இறைச்சிக்கு தடை போட்டு ஆட்சியாளர்கள் இன்று குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களை பார்த்து நான் கேட்கிறேன். இன்னும் ஒரு சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் ஏற்படுத்திவிடாதீர்கள். இதை மக்கள் சந்திக்க தயாராகிவிட்டார்கள். நாங்களும் அதை சந்திக்க தயாராகிவிட்டோம். நாடு வாழ, உண்மையாக கூட்டாட்சி தத்துவம் மலர்ந்திட, உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம். இந்திய நாட்டின் மதச்சார்பின்மையை மக்களிடம் எடுத்து சொல்ல, தி.மு.க. சார்பில், கருணாநிதி சார்பில் நான் உங்களுக்கு உறுதிமொழி தருகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.