கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பிடிவாரண்டு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மசினகுடி ஊராட்சியில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சந்திரன். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 1980-ம் ஆண்டு பாடாந்தொரை மற்றும் தேவாலா கிராமங்களுக்கு தலைவராக(ஹெட்மேன்) நியமிக்கப்பட்டேன். அதன்பிறகு ஹெட்மேன் பணியிடம் கலைக்கப்பட்டதால், 1990-ம் ஆண்டு மசினகுடி ஊராட்சி உதவியாளராக நியமிக்கப்பட்டேன்.
ஊராட்சி உதவியாளர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அந்த அடிப்படையில், எனக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கக்கோரி பலமுறை கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தேன். ஆனால், பரிசீலிக்கவில்லை. இந்தநிலையில் நான் 28.2.2013 அன்று ஓய்வு பெற்றேன்.
தண்டிக்க வேண்டும்
இருந்தபோதிலும் எனக்கு பதவி உயர்வு வழங்கி, அதற்கான பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எனது கோரிக்கையை 2 வாரத்துக்குள் கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனாலும் கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், எனது கோரிக்கையை பரிசீலிக்கவில்லை. எனவே, கோர்ட்டு அவமதிப்பின் கீழ் வட்டார வளர்ச்சி அலுவலரை தண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிடிவாரண்டு
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதிகாரி சிவக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இந்த மனு பலமுறை விசாரணைக்கு வந்தபோதும் அதிகாரி சிவக்குமார் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்தநிலையில் அந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் சிவக்குமார் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதைதொடர்ந்து, கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமாருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செயல்படுத்தி அதிகாரி சிவக்குமாரை வருகிற 13-ந் தேதி ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.