கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல குவிந்த தொண்டர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்கள்
சென்னை கோபாலபுரம் வீட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நேற்று தொண்டர்கள் குவிந்தனர்.
சென்னை,
சென்னை கோபாலபுரம் வீட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நேற்று தொண்டர்கள் குவிந்தனர். ஆனால், டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் தொண்டர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
கருணாநிதி பிறந்த நாள்
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று தனது 94-வது பிறந்தநாளை கொண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை கொண்டாடும்போது, காலையிலேயே புத்தாடை அணிந்து, சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் மரக்கன்று நடுவதை கருணாநிதி வழக்கமாக வைத்திருந்தார். அதன்பின்னர், அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தும் கருணாநிதி, கோபாலபுரம் வீட்டில் குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவார். அதன்பின்னர், அண்ணா அறிவாலயம் சென்று தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுவார்.
ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களாக கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, வழக்கம்போல நேற்றும் வீட்டிலேயே இருந்தார். காலை 9 மணியளவில் அவர் புத்தாடை அணிந்துகொண்டார்.
மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார்
அங்கு வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சேர்ந்து கருணாநிதியிடம் ஆசி பெற்றார். அவரைப்போல், மு.க.தமிழரசுவும், அவரது மனைவி மோகனாவும் ஆசிபெற்றுக் கொண்டனர்.
தி.மு.க. மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கவிஞர் கனிமொழி, தாயார் ராஜாத்தியம்மாளுடன் வந்து, கருணாநிதியிடம் ஆசி பெற்றார். இதேபோல், கூட்டணி கட்சி தலைவர்களும், தி.மு.க. தொண்டர்களும், கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக கோபாலபுரம் இல்லம் முன்பு குவிந்திருந்தனர். வீடு முன்பு பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. வாயிலில் வாழைகள் கட்டப்பட்டு, ஆங்காங்கே தோரணங்களும் தொங்கவிடப்பட்டு இருந்தன.
டாக்டர்கள் அறிவுறுத்தல் காரணமாக, தி.மு.க. தலைவர் கருணாநிதியை குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அனைவரையும், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினே சந்தித்தார். அவரிடம் சால்வை மற்றும் புத்தகம் உள்ளிட்ட பரிசு பொருட்களை தொண்டர்கள் வழங்கினார்கள்.
இனிப்பு வழங்கி தொண்டர்கள் மகிழ்ச்சி
தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர்அல்போன்ஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை மற்றும் பரிசுப் பொருளை வழங்கினார்கள். மேலும், தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
வீட்டிற்கு வெளியே நின்ற தொண்டர்கள், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்க” என்று கோஷம் எழுப்பியதுடன், இனிப்புகளையும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வீட்டில் தொண்டர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் காலை 11.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவரைத் தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யும் வெளியே புறப்பட்டு சென்றார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார். விரைவில் வெளியே வந்து தொண்டர்களை சந்திக்கும் அளவுக்கு நலம் பெறுவார். டாக்டர்கள் ஆலோசனைப்படி, அவரை எல்லோரும் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நோய் தொற்று ஏற்படும் என்ற பயத்தால் எல்லோரையும் சந்திக்க விட முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.