மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்ற நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி வைரவிழாவில் டி.ராஜா பேச்சு

மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்ற நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி என்று இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.;

Update: 2017-06-03 13:11 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று 93 வயது முடிந்து 94-வது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாள் விழாவும், சட்டமன்றத்தில் அவர் 1957-ம் ஆண்டு முதல் தொடர்ந்து  எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருவதால் சட்டமன்ற வைர விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் கருணாநிதியின் வைரவிழா இன்று தொடங்கியது. வைரவிழாவில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி, தி.மு.க.வின் பொது செயலாளர் க. அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின், முன்னாள் மந்திரி துரைமுருகன், கனிமொழி எம்.பி. டெரிக் ஓ பிரையன், திருநாவுக்கரசர், காதர் மொய்தீன், டி. ராஜா, உமர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி வைரவிழாவில் இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா பேசியதாவது:

கருணாநிதி பன்முக திறமை கொண்டவர், அவரது எழுத்துக்களை படித்தவன், நேசித்தவன் நான். சமூக நீதிகளுக்கு குரல் கொடுத்தவர், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவர் கருணாநிதி.  இந்தியாவை மதவெறி அரசியலில் இருந்து மீட்க, ஸ்டாலின் எங்களோடு கைகோர்ப்பார். மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்ற நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்