சென்னை சில்க்ஸில் மீண்டும் தீ பற்றி எரிந்தது. கட்டிடம் இடிப்பதில் தாமதம்

கட்டிடம் இடிப்பு பணியின்போது சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இன்று மீண்டும் தீ எரிந்தது.இதனால் கட்டிடம் இடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.;

Update: 2017-06-03 10:01 GMT
சென்னை,

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31-ந்தேதி அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 7 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் முழுவதும் எரிந்து நாசமானது. கடந்த 2 நாட்களாக போராடி தீயணைத்தனர். ரூ.100 கோடிக்கு பொருட் சேதம் ஏற்பட்டது.

இதையட்டி அரசு சார்பில் அந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பொக்லைன் உள்பட நவீன எந்திரங்கள் மூலம் கட்டிடங்கள் இடித்து அகற் றப்பட்டு வருகிறது.இதையொட்டி கடந்த 4 நாட்களாக உஸ்மான் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன்,  தனியார் நிறுவன ஊழியர்கள் 120 பேர் ஷிஃப்ட் முறையில் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணிக்கு கட்டடத்தை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இரண்டாவது நாளான இன்று காலை 8 மணிக்கு, கட்டடத்தை இடிக்கும்பணி தொடங்கியது. அப்போது, 7-வது மற்றும் 6-வது மாடியில் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், கட்டடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

உடனடியாக தீயணைப்பு படையினர் பல லாரிகளில் கொண்டு வந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதை தொடர்ந்து கட்டிட இடிபாடுகள் அகற் றும் பணி, கட்டிடத்தை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கியது. கட்டிடத்தை மும்முரமாக அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் உஸ்மான் சாலை யில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு, தடுப்பு வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்