கருணாநிதிக்கு, கேரள கவர்னர் சதாசிவம் வாழ்த்து
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்தநாளையொட்டி, கேரள கவர்னர் பி.சதாசிவம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்தநாளையொட்டி, கேரள கவர்னர் பி.சதாசிவம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்தநாள் விழா சென்னையில் 3–ந்தேதி முதல் 6–ந்தேதி வரை தமிழக சட்டசபை வைரவிழாவாக கொண்டாடுவதை அறிந்து உள்ளபடியே அகமகிழ்கிறேன்.
தமிழகத்தை சேர்ந்தவன் என்பதால், விவசாயிகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்காக அவர் ஆற்றிய பணிகளை, திட்டங்களை நன்கு அறிவேன், பாராட்ட கடமையும் பட்டிருக்கிறேன். தமிழகத்தின் முதல்–அமைச்சராக கருணாநிதி பதவி ஆற்றிய சமயத்தில், அவரது அன்பும், கருணையும் அவர் கொண்டுவந்த திட்டங்களில் பிரதிபலிப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அரசியல் பணிகளுக்கு இணையாகவே, மொழி–இலக்கிய துறைகளில் எழுத்தாளராக, கவிஞராக அவரது அறிவும், ஆற்றலும் இருந்தது. இத்துறையில் அவரது பங்களிப்பும் அளப்பரியது.
94–வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த தருணத்தில் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். மக்கள் பணிக்காக அவர் செய்த சேவைகள், பொதுமக்களின் வாழ்த்துகளாக அவருக்கு வந்துசேரட்டும். என்னுடன், எனது மனைவி சரஸ்வதி சதாசிவமும் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.