மணமேடையில் அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் உறவினர்கள் அதிர்ச்சி
திருப்பத்தூர் அருகே மணமேடையில் அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு தம்பி தாலி கட்டியதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செல்லரப்பட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
இவர்களில் மூத்தவருக்கும் மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.
அதன்படி நேற்று காலை திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் இரவு மணப்பெண் அழைப்பு, நலங்கு சடங்குகள் நடைபெற்றன.
தாலி கட்டிய தம்பி
நேற்று காலை திருமணத்தை காண பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கோவிலுக்கு வந்திருந்தனர். அங்கு மணமக்களுக்கு அலங்காரம் செய்து, அவர்களை மணமேடைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் மந்திரம் முழங்க தாலியை மணமகனிடம் எடுத்து கொடுத்தபோது அருகில் நின்று கொண்டிருந்த மணமகனின் தம்பி திடீரென தனது அண்ணனை மணமேடையில் இருந்து தள்ளிவிட்டு, தனது கையில் வைத்திருந்த தாலியை மணமகள் கழுத்தில் அவசர, அவசரமாக கட்டினார். அதனை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் ஆத்திரமடைந்த உறவினர்கள் தாலி கட்டிய மணமகனின் தம்பியை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
காதலித்து வந்தோம்
பின்னர் அவரிடம் எதற்காக இப்படி செய்தாய்? என கேட்டனர். அதற்கு அவர், “எனது அண்ணனுக்கு பெண் பார்க்க சென்றபோது அந்த பெண்ணை எனக்கு பிடித்து விட்டது. அப்போது இருந்தே நாங்கள் 2 பேரும் காதலிக்க தொடங்கி விட்டோம் என்றார். அதன்பிறகு மணபெண்ணையும் அவரது உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமணத்துக்காக மணக்கோலத்தில் வந்த அண்ணன் தான் அணிந்திருந்த வேட்டி, சட்டையை கிழித்துவிட்டு, கதறி அழுதபடி கோவிலை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதனை எதுவும் பொருட்படுத்தாத திருமண ஜோடியினர் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.
அதிர்ச்சியில் இருந்த உறவினர்கள் யாரும் திருமண விருந்தை சாப்பிடாமல் அங்கிருந்து வெளியேறினர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.