கருணாநிதிக்கு சோனியாகாந்தி வாழ்த்து சிறந்த நிர்வாகியாக திகழ்ந்ததாக பாராட்டு
94-வது பிறந்தநாள் கொண்டாடும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
94-வது பிறந்தநாள் கொண்டாடும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்த நிர்வாகியாக அவர் திகழ்ந்ததாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணா நிதியின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிறந்த நிர்வாகி
இன்றைய அரசியல் தலைவர்களில் மிக மூத்த தலைவர்களில் ஒருவராகத் திகழும் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மிகவும் கோலாகலமாக ஜூன் 3-ந்தேதி நடைபெற இருப்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு சில தலைவர்கள்தான் தங்களது வாழ்க்கையும், பணிகளும் இரண்டு நூற்றாண்டுகளில் நீடிப்பதாகச் சொல்லிக்கொள்ள முடியும். 1940-ம் ஆண்டுகளில் தொடங்கிய கருணாநிதியின் அரசியல் வாழ்வானது, இருபதாம் நூற்றாண்டின் பெரும் பகுதியையும், 21-ம் நூற்றாண்டில் 17 ஆண்டுகளும் என முக்கியமான பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்புடையதாக இருக்கிறது.
தமிழக அரசியலை வடிவமைத்த இரு தூண்களில் ஒரு தூணாக 1969-ம் ஆண்டு முதல் கருணாநிதி ஆட்சியில் இருந்த போதும் சரி, ஆட்சியில் இல்லாத போதும் சரி, திகழ்ந்து வருகிறார். அவர் முதல்-அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்திருக்கிறார். குறிப்பாக திராவிட இயக்கத்தின் அடித்தளக் கருத்துகளை அமல்படுத்துவதிலும், எந்தவொரு முடிவையும் விரைந்து எடுப்பதிலும் தலைசிறந்தவராக விளங்கியுள்ளார். மாநில வளர்ச்சியிலும் மக்கள் நலத்திட்டங்களிலும் சரிநிகர் சமானமாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளார். அதுவே தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வந்துள்ள அரசுகளுக்கு அடையாளமாக இருந்து வந்துள்ளது.
சிறந்த வாதத்திறமை கொண்டவர்
எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருக்கும் போது தகுந்த ஆதாரங்களுடனும், சிறந்த வாதத்திறமை கொண்டவராகவும், கூர்மையான நகைச்சுவை உணர்வுடனும் பேசக்கூடிய வல்லமை கொண்டவராகவும் இருந்ததால் அரசுத்தரப்பில் அதை அவர் எதிர்கொள்ள தயாராக இருக்க நேரிட்டது.
அரசியலே வாழ்வாகவும், உயிர் மூச்சாகவும் கருணாநிதி கொண்டிருந்தாலும், மேலும் பல்வேறு அம்சங்களுடன் அரிதானவராக, முழுமையான மனிதராகவே திகழ்ந்து வருகிறார். அவர் ஒரு பத்திரிகையாளராக, நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, கவிஞராக, நாடக ஆசிரியராக, திரைக்கதை எழுத்தாளராக, நடிகராக, திரைப்பட தயாரிப்பாளராக, எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் அறிஞராக விளங்கி வருகிறார்.
48 ஆண்டுகள் தலைமை பொறுப்பு
திருக்குறளுக்கும், தொல்காப்பியத்துக்கும் அவர் எழுதிய விளக்க உரைகள், பழங்காலத் தமிழ் இலக்கியங்களை படிப்பதற்கு முக்கிய பங்களிப்பாக இருந்து வருவதாகக் கருதப்படுகிறது. 1969-ம் ஆண்டு முதல் கொண்டு அவர் தி.மு.க.வின் தன்னிகரற்ற தலைவராக இருந்து வருகிறார். 1957 முதல் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றுவருகிறார். மத்தியில் முக்கிய பங்கு வகிக்க அவருக்குப் பல்வேறு வாய்ப்புகள் கிட்டியிருந்த போதும், அவர் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
1971, 1980, 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு அவர் அளித்து வந்த தீவிரமான ஆதரவை இந்த நேரத்தில் நினைவு கூர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 48 ஆண்டுகள் தொடர்ந்து ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பது என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. இன்னும் சொல்லப்போனால், உலகின் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இல்லாத வகையில் இது ஒரு சாதனையாகும் என்றேதான் சொல்ல வேண்டும்.
நீண்டநாள் வாழ வாழ்த்து
கடந்த சில மாதங்களாக கருணாநிதியின் உடல்நிலை சரியில்லை என்பது எனக்குத் தெரியும். இதுகுறித்து அவ்வப்போது நான் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்து, அவர் நீண்ட நாட்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வேன்.
கருணாநிதியின் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து நானும் இணைந்து எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு, நல்ல உடல்நிலையின் பெரும் பலனை அவர் பெறுவதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் சோனியாகாந்தி கூறியுள்ளார்.