போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடக்கிறது
சென்னையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.;
சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்த வேண்டும். இது காலதாமதமாகி வந்ததால் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர கோரி கடந்த மார்ச் 7-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் தொ.மு.ச. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்பட 10 தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி ஆகியோர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனடிப்படையில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் 24-ந்தேதி அப்போதைய போக்குவரத்து துறை செயலாளர் சந்திரகாந்த் பி.காம்ளே தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
அறிக்கை தயார்
அதில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 40 பேர் கொண்ட துணைக் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த மாதம் 27-ந்தேதி துணை கமிட்டிகளுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பேசப்பட்ட கருத்துகள் குறித்து அதிகாரிகள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் அறிக்கையாக தயார் செய்து அளித்தனர்.
இதற்கிடையில் மதுரை ஐகோர்ட்டு, தாமாக முன்வந்து, தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்களை ஏன் இதுவரை வழங்கவில்லை என கேள்வி எழுப்பியதுடன், தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு வரும் 9-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தொ.மு.ச. பொருளாளர் நடராஜன் கூறியதாவது:-
அடுத்த கட்ட நடவடிக்கை
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர்புடைய வழக்கு சென்னை ஐகோர்ட்டில் வரும் 9-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதற்குள் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விடுமா? என்று கூற முடியாது. நாளை (இன்று) சென்னை குரோம்பேட்டையில் உள்ள பணிமனையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் கலந்து கொள்வதாக அறிவித்து உள்ளார்.
முறையாக பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பின்னர் தான், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்க இயலும்.
இவ்வாறு அவர் கூறினார்.